உடல் எடை குறைய வேண்டுமா? முதலில் மனதால் நினையுங்கள்..!

in #weightlosstips3 years ago (edited)

fpsia0p_weight-loss-800_240x180_26_May_20.webp

மாறி வருகின்ற உணவு பழக்கத்தினாலும் உடல் உழைப்பு குறைவாக உள்ள பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

மனதால் நினைக்க வேண்டும் நம் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் மனரீதியாக நினைக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்போதுதான் நாவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அதை செய்யாமல் நினைத்த நேரத்தில் கிடைத்த அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு பிறகு உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.

நமது உடலுக்கு தகுந்த உணவு எது என்பதை நாமே தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ருசிக்காக கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு குறைந்த கலோரி உள்ள உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் அப்பொழுதுதான் உடல் எடை விரைவாக குறையும். பாஸ்ட் புட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுரை. உடல் எடை குறைய வேண்டும் என்றால் முதலில் நம் கவனத்தை செலுத்த வேண்டியது நாம் உண்ணும் உணவில் தான்.

அதுவும் சத்தான ராகி, கோதுமை, ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்ண வேண்டும். இது உடலுக்கு தேவையான சத்துக்களை அதிகநேரம் எடுத்துக் கொள்வதுடன் பசி உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படுகிறது.

தண்ணீர் குடியுங்கள்:

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தண்ணீர். ஆகவே உணவு உண்ணும் முன் தண்ணீர் குடிப்பது பசி உணர்வை குறைக்கும். உணவும் குறைவாகவே உண்பீர்கள். இதனால் உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைக்கும். இதனாலேயே உடல் எடையை குறைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது.

மெதுவாக உண்ண பழகுங்கள்:

உணவை நன்றாக மென்று உண்பது உடலுக்கு சிறந்தது. ஏனெனில் ஜீரணத்திற்கு தேவைப்படும் அனைத்து என்சைம்களும் நாவில் இருந்துதான் கிடைக்கின்றன. எனவே சத்தான உணவுகளை அள்ளி விழுங்காமல் மெதுவாக மென்று அரைத்து உண்பது அதிக அளவு உணவு உண்பதை தடுக்கும். உடல் எடையும் கட்டுக்குள் வைக்கும்.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91904.22
ETH 3093.99
USDT 1.00
SBD 3.11