ஆயுஷ்மான் பவ இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

in #tamillast year

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (13.09.2023) காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பவ இயக்கத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஆயுஷ்மான் பவ இயக்கத்தின் குறிக்கோள், எந்த கிராமும் எந்தவொரு நபரும் தரமான சுகாதார சேவைகளில் இருந்து விடுபடக்கூடாது என்பதாகும் என கூறினார். உலகளாவிய சுகாதார பாதுகாப்பு இலக்கை அடைவதில் நமது நாட்டை இது வெற்றியடையச் செய்யும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருந்தால், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதி நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதற்கு பல அமைச்சகங்கள் இணைந்து அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதுபோன்ற பெரிய இலக்குகளை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அனைத்து பயனாளிகளுக்கும் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படுவதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயுஷ்மான் கூட்டங்களை ஏற்பாடு செய்தல்; ஆயுஷ்மான் விழாக்களை ஏற்பாடு செய்தல், மற்றும் வீடுகளுக்கே ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயன்களை வழங்குதல் ஆகியவற்றின் கீழ் பல்வேறு சேவைகளை வழங்குவது பாராட்டுக்குரியதாகும் என அவர் தெரிவித்தார்.

பல துறைகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகளை பின்பற்றுவதில் இந்தியா மிகுந்த முன்னேற்றத்தைக் கண்டு வருவதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், 2021-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மற்ற துறைகளைப் போலவே சுகாதார சேவைகள் துறையிலும் டிஜிட்டல் நடைமுறைகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பவ இயக்கம் என்பது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு விரிவான நாடு தழுவிய சுகாதார முன்முயற்சியாகும். இது நாட்டின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தையும் சென்றடையும் வகையில் விரிவான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 96423.52
ETH 3385.69
USDT 1.00
SBD 3.07