ஆண்ட்ராய்டு ஒஎஸ் புதுப்பிப்புகளுடன் வெளிவரும் எசன்ஷியல் போன்.!

in #public8 years ago

ஆண்டராய்டு சாதனங்களில் மென்பொருள் உருவாக்கியவர் ஆன்டி ருபின், இன்றளவில் ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் அதிகமான ஸ்மார்ட்போன்களில் பயன்படுகிறது, தற்சமயம் ஆண்டராய்டு வசதியை உருவாக்கிய ஆன்டி ருபின் எசன்ஷியல் போன் மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது எனக்கூறப்படுகிறது.
இந்த எசன்ஷியல் போன் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் எசன்ஷியல் போன் பொறுத்தவரை ஆண்டராய்டு ஒஎஸ் புதுப்பிப்புகளுடன் வருகிறது, அதன்பின் 2ஆண்டுகளுக்கு உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது.
அதன்பின் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என ஆன்டி ருபின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு இடங்களில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இயங்குதளம்:
எசன்ஷியல் போன் பொதுவாக ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் ஆக்டோ-கோர் 1.9ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.கார்னிங் கொரில்லா கண்ணாடி :
இக்கருவி 5.7-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1321-2560)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது எசன்ஷியல் போன்.4ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.4கே வீடியோ:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. 4கே வீடியோ பதிவு ஆதரவு கொண்டுள்ளது இந்த எசன்ஷியல் போன்.இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.3040எம்ஏஎச்:
எசன்ஷியல் போன் பொறுத்தவரை 3040எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும்185 கிராம் எடை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.விலை:
எசன்ஷியல் போன் விலைப் பொறுத்தவரை ரூ.44,800ஆக உள்ளது, மேலும் அமேசான் போன்ற வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84168.37
ETH 2275.93
USDT 1.00
SBD 0.68