◆மேகி நூடுல்ஸின் வாக்குமூலம்◆

in #nestle4 years ago (edited)

Uploading image #1...
இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகி நூடுல்ஸ் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அதை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் ஒப்புக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகில் பல்வேறு நாடுகளில் உற்பத்தி மையங்களை அமைத்துள்ள நெஸ்லே நிறுவனத்தின் உணவு பொருட்கள் குறித்து திடுக்கிடும் செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது மட்டுமின்றி சிறுவர்கள் மற்றும் பெரியோரால் விரும்பி உண்ணப்படும் மேகி நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு கிடையாது என்று அதை தயாரித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

மேகி நூடுல்ஸ் மட்டுமின்றி ஐஸ்கிரீம் உட்பட 60 சதவீத உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என்று நெஸ்லே நிறுவனம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும் உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால் அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67