Tamil NadusteemCreated with Sketch.

in #jebahar7 years ago

அரசியலுக்காக அவுத்துப் போட்டு அசிங்கப் படுத்தும் அய்யாக்கண்ணு !

12.03.2017 அன்று முதல் போராட்டம் தொடங்கும்.

14.03.2017 முதல் 100 நாள் உண்ணாவிரதம் என்று அறிவிப்பு.

இந்த அழைப்பு அச்சடிக்கும் போது விவசாயக் கடன் தள்ளுபடி இடம் பெறவில்லை. பின்னர் ரப்பர் ஸ்டாம்ப் அடித்து சேர்க்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் திரு.ராதாமோகன் சிங் அவர்களை சந்திக்கும்போது வங்கிகள் கடனை கறாறாக வசூலிக்கக் கூடாது என்று அய்யாக்கண்ணு வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார் . ஆனால் தமிழக முதல்வர் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக சட்டமன்றத்தில் 22 .02. 2017 அன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார் .அதில் கூட , பல்வேறு காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இருந்த போதும் , அய்யாக்கண்ணிடம் சரியான விவரம் இருந்தால் தரவும் என்று கேட்டதற்கு அவரிடம் இல்லை என்பதே பதிலாக இருந்தது.

தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்காக வழக்குப் பதியப்பட்ட விவரம் இருக்கிறதா என்று வேளான் துறைச் செயலர் கேட்டதற்கு இல்லை என்று சொன்னார் அய்யாக்கண்ணு

இவரது வேறு கோரிக்கைகளைப் பார்ப்போம் !

கோரிக்கை 1 : தமிழ்நாடு பாலைவனமாவதை தடுக்கவும் !

எப்படி? என்ன செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? எந்த விவரமும் கிடையாது!

கோரிக்கை 2 : காவிரி வரளாமல் காக்கப்பட வேண்டும்

தமிழகத்தில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு மற்றும் சிறுவாணி, சண்முகா நீதி போன்ற கிளை ஆறுகளின் நிலை என்ன?

இந்த நதிகளின் போக்கில் அமைந்த ஏரிகளின் நிலை என்ன?

மாசுபடுத்தும் மற்றும் ஆக்கிரமித்துள்ளவர்கள் யார்?

மணல் கொள்ளை காண்ட்ராக்டர்கள் யார்?

தடுப்பணைகள் ஏன் கட்டப்படவில்லை?

இந்தக் கேள்விகள் அனைத்தும் மாநில அரசிடம் கேட்கப்பட வேண்டும்.

கோரிக்கை 3 : காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் !

கோரிக்கை 4 : நதிகள் இணைக்கப்பட வேண்டும் !

அரசு தேசிய நதி நீர் ஆணையம் அமைக்கவுள்ளது. நம் நாட்டிலுள்ள அனைத்து நதிகளும் இந்த ஆணையத்தின் கீழ் வரும். தனி நதி நீர் ஆணையங்களின் தேவை இனிமேல் இல்லை !

நதி நீர் இணைப்புக்கு இந்த வாரியம் அமைக்கப்படுவது அடிப்படையாகிறது. !

கோரிக்கை 5 : விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணையம் செய்ய வேண்டும் !

இந்த விலை நிர்ணையம் வேளான் கல்லூரி பிரதிநிதிகள் , வேளான் துறை வல்லுனர்கள் , பொருளாதார நிபுணர்கள் , அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசால் நிர்ணையம் செய்யப் படுகிறது. இந்தக் குழுவினர் அனைவரையும் முட்டாள்கள் என்கிறாரா அய்யாக்கண்ணு ? இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள வேளான் துறை வல்லுனர்களுக்கும் விவசாயம் தெரியாது என்கிறாரா ?

தமிழகத்திற்கான வறட்சி நிவாரணம் இந்தக் கோரிக்கைப் பட்டியலில் ரப்பர் ஸ்டாம்பால் அடித்துச் சேர்க்கப்படவில்லை !

மணல் கொள்ளை அரசியல்வாதிகளும் , மீடியாக்களும் , மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை முழு நேரத் தொழிலாகக் கொண்ட அமைப்புக்களும் அய்யாக்கண்ணுப் போராட்டத்திற்கு மாநிலம் தழுவிய வடிவம் கொடுக்க பட்டியலில் சேர்க்கப்பட்டதே இந்தக் கோரிக்கை !

இதில் பிரதமர் மோடி ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்வி வேறு !

ஏற்கப்பட்ட கோரிக்கைக்கும் , சாரமில்லாத கோரிக்கைக்கும் போராட்டம் நடத்துவதன் காரணமென்ன ?

ஆக அறிவிக்கப்பட்டது 100 நாள் போராட்டம் !

இதில் இடை இடையே பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்புகள் !

எதையும் ஏற்கமாட்டோம் என்று உள்நோக்கத்துடனான செயல்பாடு !

போராட்டம் தொடர் உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டது. உண்ணாவிரதத்தில் எலி ,பாம்பு தின்பது எங்கிருந்து வந்தது ?

தமிழ் கலாச்சாரத்தில் அவுத்துப் போட்டு அசிங்கப் படுத்துவது எங்கிருந்து வந்தது ?

இந்தப் போராட்டம் தமிழர்களின் மானத்தைக் கப்பல் ஏற்றி வருகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை !

அடிப்படை நியாயம் எதுவுமின்றி அரசியல் உள்நோக்கம் கொண்ட போராட்டம் இன்று அசிங்கத்தின் உச்சியை எட்டி விட்டது !

அனைத்து தமிழ் whatsapp, facebook விவசாய போராளிகளுக்கும் பகிரவும்..!

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96240.27
ETH 3591.45
USDT 1.00
SBD 3.91