ஹீமோகுளோபின்

images (6).jpeg
ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்தசோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்கள் உடலில் செலுத்தப்படுகிறது. நம்முடைய எலும்பு மஜ்ஜையானது ரத்த வெள்ளை அணுக்களை எப்போதும் உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். இந்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகி ரத்தம் மற்றும் நிணநீர் திசுக்களில் சேமிக்கப்படுகின்றன.

ஒரு சில வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 1 முதல் 3 நாட்களாக உள்ளது. நம் உடலில் ரத்த வெள்ளை அணுக்கள்(White blood cells) ஒரு சதவீதம்தான் இருக்கும். இந்த அணுக்களை Leukocytes என்றும் அழைக்கிறோம். இவை நோயிலிருந்தும், உடல் நல குறைவிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. இவை நோய் எதிர்ப்புத் திறனை பெற்றிருப்பதோடு ஒரு போர் வீரனைப் போல செயல்படுகிறது. ரத்தத்தட்டுக்கள்(Platelets) என்பது மிக நுண்ணிய ரத்தத் திசுக்கள். இவை நமது உடலிலிருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுத்து ரத்தம் உறைதலுக்கு உதவுகிறது.

எலும்பு மஜ்ஜையானது எலும்புகளின் நடுவில் பஞ்சைப் போன்று இருக்கும் ஒரு அமைப்பு. ரத்தத்தட்டுக்கள் உற்பத்தியான பிறகு நமது ரத்த ஓட்டத்தில் கலந்து சராசரியாக 8 முதல் 10 நாட்கள் வரை இருக்கும். நம் ரத்தத்தில் ஆன்டிஜென்களும்(Antigens) ஆன்டிபாடிகளும்(Antibodies) இருக்கும் நிலையைப் பொறுத்தே ரத்தம் வகைப்படுத்தப்படுகிறது. 1900-ம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டுபிடித்தார். அதன்படி ரத்தம் பொதுவாக A, B, O, AB என்று 4 வகைகளாக பிரிக்கப்பட்டது.

ரத்த சிவப்பணுக்களில் ஏ, பி யை தவிர மேலும் ஒரு ஆன்டிஜென் சில நேரங்களில் காணப்பட்டால் இவ்வகை புரதம் RHD ஆன்டிஜென் என்று சொல்லப்படுகிறது. ஒருவரின் ரத்த சிவப்பணுக்களில் RhD Protein ஆன்டிஜென் காணப்பட்டால் அவற்றின் ரத்த வகை Positive blood என்றும் அவ்வாறு இல்லை எனில் Negative blood என்றும் பிரிக்கப்படுகிறது. இதன்படி A Positive (A+), A Negative (A-), B Positive (B+), B Negative (B-), O Positive (O+), O Negative (O-), AB Positive (AB+), AB Negative (AB-) என்று ரத்தம் 8 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதோடு பம்பாய் ரத்தம் என்ற மற்றொரு வகை ரத்தமும் உள்ளது. 1952-ம் ஆண்டு முதன் முதலில் டாக்டர் Y.M.Bhende என்பவர் பம்பாய் ரத்ததைக் கண்டுபிடித்துள்ளார். பம்பாயில் அறிமுகமானதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. 10 லட்சம் பேர்களில் நால்வருக்குத்தான் இந்த ரத்தவகை இருக்கிறது.

O ரத்த வகை உள்ளவர்கள் 37.12 %, B ரத்த வகை உடையவர்கள் 32.26 %, A ரத்தம் வகை உள்ளவர்கள் 22.88% AB ரத்தம் உடையவர்கள் மிகவும் குறைவாக, அதாவது வெறும் 7.74% பேர் மட்டுமே உள்ளனர் என்று இந்தியாவில் ஆய்வு மேற்கொண்டு 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

O வகை ரத்தப்பிரிவினரை Universal Donor என்று அழைக்கிறோம். இந்த வகை ரத்தமுள்ளவர்கள் A, B, AB போன்ற ரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம். அதுபோன்று AB ரத்த வகையினரை Universal Recipient என்று அழைக்கிறோம். இந்த வகை ரத்தமுள்ளவர்களுக்கு O, A, B வகை ரத்தங்களில் எதனையும் செலுத்தலாம்.

பம்பாய் ரத்த வகை மிகவும் அரிய வகை ரத்தம் என்பதாலும், இந்த ரத்தம் உள்ளவர்கள் மிகவும் குறைவு என்பதாலும் ரத்தம் தேவைப்படும்போது நோயாளி அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இவ்வகை ரத்தம் உள்ளவர்கள் ரத்ததான முகாமில் ரத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இந்த வகை ரத்தத்தின் வாழ்நாள் வெறும் 45 நாட்கள் மட்டும்தான். எனவே தேவைப்படும்போது மட்டும் கொடுப்பது நல்லது. பம்பாய் ரத்த வகை உள்ள ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டால் மற்ற எந்தப் பிரிவு ரத்தத்தையும் செலுத்த முடியாது. அதே வகை ரத்தம்தான் செலுத்த வேண்டும். பொதுவாகவே அந்தந்த வகை ரத்தத்திற்கு, அந்தந்த வகை ரத்தம் செலுத்தும் முறைதான் சிறந்தது..

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59722.01
ETH 3267.61
USDT 1.00
SBD 2.36