உலக ரத்த தான தினம் ஜூன்-14.

images (11).jpeg

நம் உடலில் உள்ள முக்கிய திரவம் ரத்தம். ஒரு செடி உயிர் வாழ்வதற்கு தண்ணீர் அடிப்படைத் தேவையாகும். அதேபோல் ,உடல் உறுப்புக்கள் சீராக செயல்பட வேண்டுமானால் ரத்தம் இன்றியமையாதது முக்கியத்துவம் வாய்ந்த ரத்தத்தை தானமாக அளிக்கும் போது ரத்தம் பெறுபவர் மட்டுமல்ல, ரத்தத்தை தானமாக கொடுப்பவரும் நன்மை அடைவார்.

ஆரோக்கியமான ஒரு மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கிறது அதேபோல் ரத்த தானம் செய்பவர் ஒரே நேரத்தில் சுமார் 200 முதல் 300 மில்லி வரை ரத்தத்தை தானமாக கொடுக்கலாம்.

உடல்நலம் சீராக உள்ள 8 முதல் 60 வரை உள்ள அனைவரும் ரத்தத்தை தானம் செய்ய தகுதி படைத்தவர்கள். ரத்த தானம் செய்பவர்களுடைய உடல் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த தானம் செய்வதற்கு முன் ரத்த அழுத்தம்,நாடித்துடிப்பு,ஹீமோகுளோபின் அளவு ஆகியவை பரிசோதிக்கப்படும். பெண்கள் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் காலத்திலும் ரத்ததானம் கொடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. தானமாக கொடுக்கப்படும் ரத்தத்திலிருந்து வெள்ளை அணுக்கள் சிவப்பணுக்கள் மற்றும் பிளாஸ்மா என மூன்றாகப் பிரிக்கப்பட்டு அவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்.

ஏ, பி ,ஓ போன்றவைகளை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி" காரில் லேன்ட்ஸ்டெயினரின்" பிறந்த நாளை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ஆம் தேதி சர்வதேச ரத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "ரத்ததானம் அளிப்பீர்; உலகை உயிர் வாழச் செய்வீர்" என்பதாகும். உலகம் முழுவதும் ரத்த தானம் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. வருடாவருடம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல மில்லியன் யூனிட் ரத்தத்தை தானமாக அளித்து வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வரும் இக்கால கட்டத்திலும் கூட ரத்தத்தின் தேவை அதிகரித்து உள்ளது. ஆகையால்,ரத்த தானம் செய்து நன்மை பெறுவோம். நம் சமூகத்தை ஆரோக்கியமாக வைத்து இருப்போம்.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92362.74
ETH 3111.98
USDT 1.00
SBD 3.15