அவள் வரவே என் விடிவு

in Tamil Success4 years ago

அவள் வரவே என் விடிவு

நினைவை கடக்கவே
காதலை வெறுக்கிறேன்
எனக்கென ஒரு சிறை
அமைத்து சில காலம்
தனிமையில் என்னை
மீட்க முயல்கிறேன்

நித்திரையில்லா இரவில்
நிம்மதி தொலைத்து
நிலைகுலைந்து நிற்கும் நிலை
இனியும் வேண்டாம்

ஆதலால் அனைத்திலும்
ஒதுங்குகிறேன் மாற்றம்
நிகழும் அதற்கு காலம்
வழி வகுக்கும்

வெற்றிடம்தான் ஆனால்
வெறும் இடமல்ல
சிறிது ஏமாற்றமாயினும்
நெஞ்சம் கலங்கும்

இனியும் காயம் நிகழாதிருக்க
தனிமையே வினா
அவள் வரவே விடை

காத்திருப்பும் சுகம் தான்
அவளுக்காக நிச்சயம்
அவள் வருவாள்

என் மனச்சிறையை அகற்ற
புது கவிதைகள் பாட
பாடல்கள் பல தேட
அவள் வருவாள்

எம்மை மீட்டே எம்மை
எமக்கு அறிமுகம் செய்வாள்
தேகம் கடந்த தேடல் அவள்
ஊடல் கடந்த காதல் அவள்

அவள்
என் உணர்ச்சியின் உச்சம்
என் இன்பத்தின் ஊற்று
என் கண்ணீரின் எல்லை
என் துயரத்திற்கு மாமருந்து

எனது ஏக்கத்தின் நிறைவு அவள்
என் தனிமையின் இழைப்பாரல் அவள்
என் புன்னகையின் மந்திரமும் அவள்
என் புதுக்கவிதையின் தொடக்கம் அவள்
ஆதலால் தான் அவள் வரவே என் விடிவு

Sort:  

Super :) Welcome to Tamil Success

Loading...

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 103312.18
ETH 3256.35
SBD 5.26